அடி தூள்!! வசூலில் பட்டைய கிளப்பும் PS-1: லைகா மாஸ் அப்டேட்..!!!

கல்கி எழுதிய நாவலை மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக உருவாக்க வேண்டும் என இயக்குனர் மணிரத்தினத்தின் கனவாக இருந்து வந்தது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படமானது கடந்த மாதம் 30-தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி,பார்த்திபன், ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ponniyin selvan 2

அதே போல் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். திரைக்கு வந்து கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு மேல் ஆன நிலையில் படத்தின் வசூல் குறித்த அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பொன்னியின் செல்வம் படமானது இதுவரையில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனையை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

cropped-ponniyin-selvan-movie-new-poster-mani-ratnam-chiyaan-vikram_1663246890.jpg

மேலும், தீபாவளி வரும் வரையில் எந்த படங்களும் வெளியாகாமல் இருப்பதால் வரும் காலங்களில் ரூ.500 கோடியை தாண்டும் என சினிமா வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.