Connect with us

சொகுசு கப்பல் சுற்றுலா: ஜூன் 4-ஆம் தேதி தொடக்கம்!!

Ship

Tamil Nadu

சொகுசு கப்பல் சுற்றுலா: ஜூன் 4-ஆம் தேதி தொடக்கம்!!

சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சட்டமன்றத்தில் அறிவித்தபடி சொகுசு கப்பல் சுற்றுலா திட்டமானது சென்னையில் செயல்படுத்தப்பட உள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் சேவையை வழங்கி வரும் கார்டெலியா கப்பல் நிறுவனம் சென்னையிலும் தனது சேவையை தொடங்குகிறது.

இரு வகையான பயண திட்டங்களுடன் நட்சத்திர விடுதிகளை மிஞ்சும் அளவிற்கு பல்வேறு அம்சங்களுடன் சேவையை வழங்கி வருகிறது கார்டெலியா நிறுவனம். சென்னை துறைமுகத்தில் இருந்து ஜூன் 4-ஆம் தேதி ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் கப்பல் வருகின்ற 6-ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளது.

இந்நிலையில் ஒரு நபருக்கான ஆரம்ப கட்டணம் ரூ.22,915 என்றும் குறிப்பாக அறைகளின் அளவு, வசதிகள், கடல் அழகை ரசிக்கும் வகையிலான அமைப்பை பொறுத்து ரூ. 29,568, ரூ.50,000 ரூ. 80,000 அமைகிறது.

மற்றோரு சுற்றுலாத்திட்டம் ஜூன் 6-ஆம் தேதி விசாகப்பட்டினம், 10-ஆம் தேதி புதுச்சேரி மற்றும் சென்னை துறைமுகம் போன்ற சுற்றுலாப்பயணிகளுக்கு ரூ.54,000 முதல் 2.37 லட்சம் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகங்கள், விளையாட்டு அரகங்கள், திரையரங்குகள், கொண்டாட்டங்கள், திருமணங்கள் மற்றும் அலுவலக கூட்டங்கள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top