சிறையில் சொகுசு வசதி: நீதிமன்றத்தில் சசிகலா இன்று ஆஜர் !!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 6 பேர்  பெங்களூரில்  அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் சிறையில் சொகுசு வசதி பெற அதிகாரிகளுக்கு ரூ.2 கோடியை லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்திய போது லஞ்சம் வழங்கியது உறுதியானது.

இதனிடையே இந்த விவகாரம்  தொடர்பாக  பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த வகையில் தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய  சசிகலா, இளவரசி உள்ளிட்ட 6 பேர்  இன்று காலை 11 மணிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment