குழந்தைகளுக்கு பிடித்தமான கலர்ஃபுல்லான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி… பீட்ரூட் பிரியாணி…!

குழந்தைகளை பொருத்தவரை உணவு என்பது சுவையாய் இருப்பது இரண்டாம் பட்சம் தான். முதலில் உணவை பார்த்தவுடன் அந்த உணவானது அவர்கள் கண்களை கவரும் விதமாக நல்ல வண்ணமயமாக இருந்தால் அவர்களுக்கு அந்த உணவை சாப்பிடும் ஆர்வமும் அதிகரிக்கும்.

அப்படி பார்த்த உடனே கண்களை கவரும் விதமான ஒரு ரெசிபி தான் பீட்ரூட் பிரியாணி.

பீட்ரூட் என்பது உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு காய்கறி ஆனால் இதை பொரியலாக செய்து கொடுக்கும் பொழுது அதை குழந்தைகளுக்கு ஏனோ பிடிப்பது இல்லை எனவே அந்த பீட்ரூட்டை சாதத்துடன் சேர்த்து பிரியாணி போல் செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

பீட்ரூட்டின் நன்மைகள்:

 • பீட்ரூட்டில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன இது உடலுக்கு நல்ல வலிமை தரக்கூடியது ஆகும்.
 • பீட்ரூட் தொடர்ந்து சாப்பிடுவதால் இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்.
 • சருமத்திற்கு நன்மை பயக்கும் காய்கறி பீட்ரூட்.
 • ஞாபக மறதி இருப்பின் பீட்ரூட் சாப்பிட்டால் மறதியை தடுக்கும்.
 • எலும்புகள் நன்கு வலுப்பெறும்.
 • குடல் மற்றும் செரிமானத்திற்கு மிகவும் நல்லது.

beetroot rice

பீட்ரூட் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

 • பீட்ரூட் – 1
 • பெரிய வெங்காயம் – 1
 • அரிசி -1 கப்
 • பச்சை மிளகாய் – 1
 • கொத்தமல்லி மற்றும் புதினா – 1 கப்
 • இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
 • மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
 • மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
 • சீரகத்தூள் – 2 ஸ்பூன்
 • சோம்பு – ஒரு ஸ்பூன்
 • பட்டை – 1
 • கிராம்பு – 2
 • ஏலக்காய் – 3
 • உப்பு – தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

பீட்ரூட் பிரியாணி செய்முறை:

 1. அரிசியை கழுவி ஊறவைத்து கொள்ளவும்.
 2. பீட்ரூட்டை நறுக்கி மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 3. அரைத்த பீட்ரூட்டுடன் இரண்டு கப் வரும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 4. குக்கரில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
 5. நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 6. பின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
 7. இவை வதங்கியதும் மிளகாய் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 8. பின்பு கலந்து வைத்த பீட்ரூட் தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
 9. கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை போட்டு குக்கரை மூடி வைக்கவும்.
 10. குறைவான தீயில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் குழந்தைகளுக்கு சுவையான அதே சமயம் சத்தான பீட்ரூட் பிரியாணி தயார்.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...