வட மாநிலங்களில் பரவி வரும் லம்பி வைரஸ்ஸால் கால்நடைகள் கொத்து கொத்தாக உயிரிழக்கும் நிலையில், தடுப்பூசி செலுத்துதலை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் 2019-ம் ஆண்டு லம்பி வைரஸ் பரவலானது ஒடிசாவில் காணப்பட்டது. தற்போது ஜூலை மாதம் முழுவதும் வடமாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக லம்பி வைரஸ்ஸால் 57 ஆயிரம் பசுக்கள் உயிரிழந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய வைரஸ் கொசு, ஈக்கள் வாயிலாக கால்நடைகளுக்கு பரவுவதாக கூறப்படுகிறது.
அப்போது பசுக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் தோல்களில் சிறுசிறு கட்டிகள் ஏற்படுகிறது. இதனையடுத்து கல்லீரல், நுரையீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டு பசுக்கள் உயிரிழக்கின்றனர்.
இதன் காரணமாக தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.