20வது ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்.. கையில் கிடைத்த வெற்றியை கோட்டைவிட்ட லக்னோ..!

20வது ஓவரில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டை இழந்த நிலையில் லக்னோ அணியினர் கையில் கிடைத்த வெற்றியை தவறவிட்ட பரிதாபமான சம்பவம் இன்றைய ஐபிஎல் போட்டியில் நடைபெற்றது.

இன்றைய ஐபிஎல் போட்டி குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற்று வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்டியா 66 ரன்கள், சகா 47 ரன்கள் எடுத்தனர்.

lsg vs gt1 இந்த நிலையில் 136 என்ற எளிய இலக்கை நோக்கி லக்னோ அணி பேட்டிங் செய்தது. கேப்டன் கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி 68 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். இதனை அடுத்து மேயர்ஸ் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் தலா 24 மற்றும் 23 ரன்கள் எடுத்தனர்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் லக்னோ அணி 16.5 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்திருந்தது என்பதும் மூன்று ஓவர்களில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டி இருந்தது என்பதும் கையில் 7 விக்கெட் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

lsg vs gtஇந்த நிலையில் 20வது ஓவரை வீச வந்த மொஹித் சர்மா முதல் பந்தில் இரண்டு ரன்கள் கொடுத்தார். அதன் பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் இரண்டு ரன் அவுட்டுக்கள் செய்யப்பட்டது.

இதனை அடுத்து கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு ரன் கூட எடுக்காததால் லக்னோ அணி பரிதாபமாக 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 20வது ஓவரை மிக அற்புதமாக வீசிய முகேஷ் சர்மாவால் தான் இந்த வெற்றி சாத்தியமானது என்பதும் கையில் கிடைத்த வெற்றியை லக்னோ அணி பரிதாபமாக நழுவ விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.