மோசமான சாதனை செய்த லக்னோ பந்துவீச்சாளர்.. அவரது முந்தைய மோசமான சாதனை முறியடிப்பு..!

லக்னோ அணியை சேர்ந்த கேஎல் ராகுல் இன்று 7000 ரன்கள் என்ற மைல்களை எட்டிய நிலையில் அதே அணியை சேர்ந்த ரவி பிஷ்னாய் மிக மோசமாக பந்து வீசிய சாதனையை செய்துள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 135 ரன்கள் எடுத்த நிலையில் 136 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ தற்போது விளையாடி வருகிறது.

Ravi Bishnoi 1

இந்த நிலையில் இன்றைய போட்டியில் குஜராத்தில் அணி பேட்டிங் செய்த போது ரவி பிஷ்னாய் மிகவும் மோசமாக பந்து பேசிய சாதனை செய்துள்ளார். அவர் நான்கு ஓவர்கள் வீசி 49 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடிய போது பெங்களூர் அணிக்கு எதிராக நான்கு ஓவர்கள் வீசி 47 ரன்கள் என்ற மோசமான சாதனையை செய்த நிலையில் அந்த சாதனையை இன்று அவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பந்து வீசிய லக்னோ பந்துவீச்சாளர்களில் ரவி பிஷ்னாய் தான் மிகவும் மோசமாக பந்து வீசினார் என்பதும் இன்று குஜராத் அணி எடுத்த ரன்களில் மூன்றில் ஒரு பகுதி அவரது 4 ஓவர்களில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோவில் மற்ற பந்துவீச்சாளர்கள் சராசரியாக 20 ரன்கள் என்ற அளவிலே கொடுத்த நிலையில் இவர் இருமடங்கிற்கும் அதிகமான ரங்களை கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ அணியின் கேஎல் ராகுல் இன்று அதிவேகமாக 7000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை செய்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வரும் நிலையில் மிக மோசமாக பந்து வீசிய சாதனையை ரவி பிஷ்னாய் செய்துள்ளது துரதிஷ்டவசமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் 22 வயதான ரவி பிஷ்னாய் வருங்காலத்தில் தனது பந்துவீச்சு திறமையை வளர்த்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...