Connect with us

கவினுக்கு டாட்டா சொன்ன லாஸ்லியா!!

Entertainment

கவினுக்கு டாட்டா சொன்ன லாஸ்லியா!!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது ஒரு காலத்தில் சண்டை, சச்சரவாக மட்டுமே போய்க் கொண்டிருந்தது. ஆனா இப்போ அதுக்கு எல்லாம் இடமே இல்லை, காரணம் அங்கு இருக்கும் கூட்டம்தான், இதற்கு முன்பு கஸ்தூரி, மதுமிதா என யாராவது உள்ளிருந்து நியாயங்களை எடுத்துரைத்ததுண்டு.

இப்போ ஒன் மேன் ஆர்மிபோல சேரன் மட்டுமே வேதம் ஓதுகிறார், ஆனால் அவரையும் சரி அவருடைய கருத்துகளும் சரி ஒதுக்கப்பட்டே வருகிறது.

22371e1d501bfad64a8ee16d99320d17

இந்தவார லக்சரி பட்ஜெட்டுக்காக, நேற்று தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எப்போ கேப் கிடைக்கும் என்பதுபோல லோஸ்லியா  கவின் காதல் உரையாடல் ஆரம்பமானது. கமல்ஹாசன் மட்டும் அல்ல, வேறு யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்பதுபோல, எதிர்கால வாழ்க்கையைப் பற்றி பேசத் தொடங்கினர்.

ஃபாஸ்ட் பற்றி எதுவும் பேச வேண்டாம்.  அது ஃபாஸ்ட் மட்டுமே என்று ஒரு மொக்கை டைலாக்கை உதிர்த்துவிட்டு, எதிர்காலத்தைப் பற்றி பேசலாம் என்றார்.

அப்போது விளையாட்டுத்தனமாக லோஸ்லியா டாட்டா காட்ட, உடனே கவின் இப்போவே டாட்டா காட்டா ஆரம்பிச்சிட்டயா, இந்த வாரம் நான் வெளியில் போவேன் என்று சொன்னார். பார்வையாளர்கள் பலரும் இந்த வாக்கு பலித்தால் நன்றாக இருக்குமே என்று கூறிவருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top