18 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு இன்னும் 12 மணி நேரத்தில் வலுப்பெற உள்ளதாகவும் இதன் காரணமாக இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது

ஏற்கனவே சென்னையில் இன்று காலை முதல் அதிக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திநகர், எம்ஆர்சி நகர் ,உள்பட பல பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment