இன்று உருவாகப்போகும் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாற வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த நிலையில் இந்த பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் அது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு சையில் நகர்ந்து மத்திய வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

இதனால் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .

இதனிடையே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோடங்கால் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் கிராம மக்கள் மாற்று வழியில் நீண்ட தூரம் பயணித்துச் செல்ல வேண்டி உள்ளது.

சினிமா பிரியர்களுக்காக சிறப்பு அருங்காட்சியகம்…. எங்கே தெரியுமா இதோ பாருங்க…

எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.