வங்கக்கடலில் மீண்டும் புயல்.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

வங்கக்கடலில் மீண்டும் புயல்.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் தோன்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain இந்த நிலையில் டிசம்பர் 5-ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக டிசம்பர் 5ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 5-ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு தோன்றிய போதிலும் புயல் உருவாகவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அனைத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும் புயலாக உருவாகாது என்பதற்கு என்று கூற முடியாது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rainகடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் மீண்டும் டிசம்பர் 5 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.