வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதை அடுத்து பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதாகவும் அது 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியபோது வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 5-ஆம் தேதி அதாவது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
இதனை அடுத்து 48 மணி நேரத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த மண்டலமாக உருவாகும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு தென்கிழக்கு கடல் பகுதியில் வலுவடைய வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 8-ஆம் தேதி முதல் புதுவை மற்றும் வட தமிழகம் பகுதியை மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று தென் கிழக்கு கடல் பகுதியில் சூறாவளி காற்று 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது.