இன்னும் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னை, புதுச்சேரியில் இன்று அதி கனமழை!

நம் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்  கனமழை காரணமாக பல இடங்களில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

இவை நவம்பர் 10ஆம் தேதி 11 ஆம் தேதியில் அதி கனமழை ஆக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன் பின்னர் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்னும் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இவை வட தமிழகத்தை நோக்கி நவம்பர் 11ஆம் தேதி அதிகாலை வந்தடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment