எச்சரிக்கை: அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 5 நாட்களுக்கு மிக கனமழை !!

நம் தமிழகத்தில் அக்டோபர் மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் அகன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் விளைவாக ஏராளமான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது.

மழை

 

இந்த நிலையில் வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இவை கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மூன்றாவது காற்றழுத்த தாழ்வு பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதன்படி வங்கக்கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் தமிழ்நாடு, கடலோர மாவட்டங்களில் இந்த மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment