ரெடியா இருங்க! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை அப்டேட்!!

அந்தமான் கடல் பகுதியில் வருகின்ற 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று மற்றும் நாளைய தினத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள்: அரசாணை வெளியீடு!!

அதே போல் வருகின்ற 2,3 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரம், உள்மாவட்டங்கள் மற்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் வருகின்ற டிச.5-ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தம் உருவாக இருப்பதாகவும், இது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 மணிநேரத்தில்.. இந்த மாவட்டங்களில் கனமழை?

மேலும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.