Connect with us

இலவச திட்டத்தால் குறைந்த பணவீக்கம்…!! ஆச்சரியப்படும் மற்ற மாநில அரசுகள்!!

ஸ்டாலின்

தமிழகம்

இலவச திட்டத்தால் குறைந்த பணவீக்கம்…!! ஆச்சரியப்படும் மற்ற மாநில அரசுகள்!!

நம் தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஆகி ஓராண்டு நிறைவானது. இது குறித்து சட்டப் பேரவையில் அவர் பல்வேறு விதமான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளையும் பட்டியலிட்டு கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் மகிழ்ச்சிகரமான பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதன்படி தமிழகத்தில் பணவீக்கம் குறைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பணவீக்கம் 5.37 சதவீதமாக குறைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட தமிழகத்தில் பணிநீக்கம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிடம் மாடல் நல்லாட்சியின் சாதனை இது என ஆய்வாளர்கள் பாராட்டுகின்றனர் இந்த சாதனை தொடரும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஏப்ரல் காண பணவீக்கம் 6.2 இலிருந்து 7.9 ஆக உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் பணவீக்கம் குறைந்துள்ளதாக கூறினார். பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் போன்றவற்றால் தமிழகத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top