Entertainment
கவினிடம் மீண்டும் நட்பு கொண்ட லோஸ்லியா.!!!!!!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 5 வது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துவிட்டது. இதுவரை 3 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மோகன் வைத்தியா எலிமினேட் செய்யப்பட்ட பிறகு, பிக்பாஸ் வீடு எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் கவினும் லோஸ்லியாவும் மீண்டும் நண்பர்களாகிவிட்டனர்.

பிக்பாஸ் வீட்டு ஹாலில் கவினிடம் பேசும் லோஸ்லியா, ”நீ நடிக்கிறாய் என்று தவறாக புரிந்துக் கொண்டேன். எனக்கு உடம்பு சுகமில்லாமல் போன போதும் என்னை நீ தான் கவனித்துக் கொண்டாய். இப்போது தான் எனக்கு புரிகிறது நீ நடிக்கவில்லை என்று. நீ உண்மையாகத் தான் இருந்தாய்” என்று கூறுகிறார்.
இதை கேட்கும் கவின் சரி என்பது போல பேசுகிறார். இதன் மூலம் இவர்களுடைய நட்பு எப்போதும்போல் மலரத் துவங்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இனி லோஸ்லியா சோகமாக இருக்கமாட்டார் என்பதால், ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்தாலும் கொஞ்சம் பாத்து வெச்சுக்கோங்க என்றும் கமென்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
