காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்.. திருப்பூரில் பயங்கரம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பனப்பாளையம் சாலை அருகே இளம்பெண் ஒருவர் உடலில் பலத்த தீக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் காப்பாற்றுங்கள் என அலறிக்கொண்டே காட்டுப்பகுதிகுள் இருந்து ஓடி வந்துள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வாட்ஸ்அப் குரூப்பை விட்டு நீக்கம்.. அட்மினின் நாக்கை அறுத்த கொடூரம்!

அதன் படி, பாதிக்கப்பட்ட பெண் பூஜாவும், ராயபாளையம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த சூழலில் நேற்றைய தினத்தில் 2 பேரும் காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

அப்போது பூஜா லோகேஷ்யிடம் திருமணம் செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த லோகேஷ் கல்லால் அடித்து தாக்கியதில் மயக்கமடைந்துள்ளார். பின்னர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இந்த மாவட்டத்திற்கு உறை பனிக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

இதற்கிடையில் 90 சதவீதம் வரை தீக்காயம் அடைந்த பூஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், லோகேஷை கைது செய்த போலீசார், உடல் நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.