மற்ற காதலர்கள் பொறாமை படும் வகையில் காதலை சொல்ல வானத்தில் பறந்த காதலன்! வைரல் வீடியோ!

இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் பலர் காதலித்து தனது வாழ்க்கை துணையை கரம் பிடிக்கின்றனர். அவ்வாறு காதலிக்கும் போது அந்த காதலை ஒருவருக்கு ஒருவர் பரிமாறும் தருணம் தான் மிகவும் முக்கியமானது.

பொதுவாக ஆண்கள் காதலை வெளிக்காட்டும் போது பல பிரம்மாண்டங்களுடன் வெளிப்படுத்துவது ஒரு அம்சமாகும். அந்த வகையில் ஒரு காதலன் தனது காதலை பறக்கும் விமானத்தில் இன்ப அதிர்ச்சியாக காதலிக்கு வெளிக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் ஜனவரி 2 அன்று லண்டனில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஒரு ஜோடி பறந்து கொண்டிருந்தது. நடு வானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அந்த காதலன் காதலி முன்னதாக போய் நின்று மண்டியிட்டு தனது வருங்கால மனைவிக்கு காதலை முன்மொழிந்தார்.

அவர் காதல் வெளிப்படுத்தியதும் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். அந்த பெண் தனது இருக்கையை விட்டு வெளியே வந்து அந்த காதலை ஏற்றுக்கொண்டதை சுற்றி இருந்த பயணிகள் ஆரவாரம் செய்தனர். ஏர் இந்தியா குழு உறுப்பினர் ஒருவர் அந்த நபரின் முயற்சியில் அவருக்கு உதவினார், அதே நேரத்தில் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.

இந்த காதல் பிரபோஸல் வீடியோவை ஏர் இந்தியா பகிர்ந்துள்ளது. தனது வருங்கால மனைவியுடன் அதே விமானத்தை திட்டமிட்டு ஏறிய அந்த நபர், ஒரு பெரிய இளஞ்சிவப்பு பேனருடன் விமானத்தின் நடுவே நடந்து சென்று, “நான் எப்போதும் உன்னுடன் நடக்க முடியும். நீங்கள் என்னுடன் நடக்க விரும்புகிறீர்களா?” என கூறியுள்ளார்.

அவள் முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் அவள் இருக்கையை விட்டு எழுந்தபோது, ​​​​அந்த மனிதன் மண்டியிட்டு அவளிடம் திருமணத்திற்கு முன்மொழிந்தான்.

மேலும் அவர் அவளிடம் முன்மொழிவதற்கு மும்பை-ஹைதராபாத்-மும்பை விமானத்தை முன்பதிவு செய்தார்.

காதலை வித்தியாசமான வெளிக்காட்டிய இந்த காதல் ஜோடியின் வீடியோ தற்போழுது சமூக வலைத்தாலங்களில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.