Connect with us

காதல் மனைவி அடித்தே கொலை..! நாடகமாடிய கணவன்… சிக்கியது எப்படி ?

222871 sdgs 1

தமிழகம்

காதல் மனைவி அடித்தே கொலை..! நாடகமாடிய கணவன்… சிக்கியது எப்படி ?

காதல் மனைவி அடித்தே கொலை..! நாடகமாடிய கணவன்… சிக்கியது எப்படி ?

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் 29- வயதான ஆட்டோ ஓட்டுனர் புகழ் கொடி. இவரது மனைவி சரிதா ( வயது 21) . கடந்த 18- ஆம் தேதி தண்ணீர் எடுக்கச் சென்ற போது சறுக்கி விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சரிதாவை புகழ் கொடி சேர்த்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சரிதா நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே சரிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சரிதாவை அடித்துக் கொலை செய்து விட்டதாகவும் அவரது அக்கா ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மயிலாப்பூரில் உள்ள உணவகத்தில் சரிதா பணியாற்றியுள்ளார். அப்போது ஆன்லைன் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்த புகழ் கொடி என்பரை காதலித்து வந்தனர்.

இதற்கிடையில் கடந்த 20 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து  கண்ணகி நகரில் வசித்து வந்தனர். இந்த சூழலில் சரிதா தனது  ஆண் நண்பர் ஜெகதீஸ் உடன் அடிக்கடி செல்போனில் பழகி வந்துள்ளார். அந்த வகையில் கடந்த 17- தேதி புகழ்கொடி செல்போனில் அழைத்த போது அவரது அழைப்பை எடுக்காமல் ஜெகதீஸ் உடன் பேசிக்கொண்டு  இருந்துள்ளார்.

ஆத்திரம் தாங்காமல் வீட்டுக்கு வந்த புகழ் கொடி சரிதாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். அடுத்த நாள் காலையில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது சறுக்கி விழுந்ததாக கூறி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக   விசாரணையில் தெரியவந்தது. தற்போது புகழ் கொடியை கொலை வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top