Connect with us

காதல் திருமணம்-மகளையும், கணவரையும் கொலை செய்த தந்தை கைது!!

கொலை

தமிழகம்

காதல் திருமணம்-மகளையும், கணவரையும் கொலை செய்த தந்தை கைது!!

நம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை மற்றும் கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குடும்பத்திற்குள்ளேயே கொலை என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.

இவை ஆணவக் கொலையாகவும் கருதப்படுகிறது. ஏனென்றால் பிள்ளைகள் காதல் திருமணம் செய்தால் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் அவர்களை கொலை செய்து வருவது தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் வருகிறது.

இந்த நிலையில் தந்தையின் அனுமதியை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவில்பட்டி அருகே நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீரபட்டியில் புதுமண தம்பதியை வெட்டி கொன்ற பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது பெண்ணின் தந்தை முத்து குட்டியை காவல்துறையினர் கைது செய்தனர். எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகள் ரேஷ்மா அவரது கணவர் மாணிக்கராஜாவை நேற்றைய தினம் கொலை செய்தார் பெண்ணின் தகப்பன்.

இதனால் போலீசார் அவரை கைது செய்து கொலைக்கான காரணத்தை விசாரணை செய்து கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை ஆனது ஜாதி பிரச்சினையால் ஏற்பட்டதா? இல்லை அந்தஸ்து அடிப்படையிலா? என்ற பல கோணங்களில் விசாரணை செய்து கொண்டிருக்கிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top