அன்பை வென்றுவிட்டது நேர்மை: ஆரிக்கு கிடைத்த பிக்பாஸ் கோப்பை!

99b9764471d25e99965f07f5f5190c61

பிக்பாஸ் வீட்டில் அன்பு ஜெயிக்குமா? நேர்மை ஜெயிக்குமா? என கடந்த 105 நாட்களாக நடந்த போரில் கடைசியில் நேர்மைதான் ஜெயித்தது என்பதும் அன்பு ரன்னர்அப் ஆகக் கூட வர முடியவில்லை என்றும் நிரூபிக்கப்பட்டது

நேற்றைய இறுதி போட்டியில் பிக்பாஸ் வின்னர் ஆக ஆரி அறிவிக்கப்பட்டார். அவருக்கு 50 லட்ச ரூபாயும் வின்னர் கோப்பையும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் சீசன் 4 ரன்னராக பாலாஜி அறிவிக்கப்பட்டார்

பாலாஜி மற்றும் ஆரி ஆகிய இருவருக்கும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார். நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் ஒருவர் பின் ஒருவராக வெளியேறி விடுவீர்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் நீங்கள் இருவரும் இறுதிப் போட்டிக்கு வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றீர்கள் என்று கூறினார் 

b5151afe79698661454ddad3c2a1702e

இந்த இறுதிப் போட்டியில் 16 கோடி வாக்குகள் ஆரிக்கு கிடைத்ததாகவும் பாலாஜிக்கு 6 கோடி வாக்குகள் கிடைத்ததாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். இதனால் 10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரி வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இறுதியில் வாழ்த்து கூறிய கமல்ஹாசன், நீங்கள் இருவருமே நேர்மையாக விளையாடினீர்கள் அதனால் இது நேர்மைக்கு கிடைத்த வெற்றி, மக்கள் வென்று விட்டார்கள் என்று கூறி இருவரையும் வாழ்த்தினார். பிக் பாஸ் டைட்டில் வென்ற ஆரிக்கு சக போட்டியாளர்களும் ஏராளமான சமூக வலைதள ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.