அமீர்-பாவணி இடையே காதல் தொடங்கி விட்டதோ? பிக்பாஸில் இன்று நடந்தது என்ன தெரியுமா?

இந்தியாவின் மிக பிரம்மாண்டமான தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அதனை பிக்பாஸ் என்றுதான் கூறலாம். இந்த பிக் பாஸ் தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

தமிழில் ஐந்தாவது சீசனை எட்டி தற்போது நிறைவு பெற உள்ளது. இன்னும் சில நாட்களிலேயே உள்ள பிக்பாஸில் அடுத்தடுத்த சந்தோசமான தருணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பிக்பாஸில் வெளியேறிய சக போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்து ஒரே குஷியாக ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.

அதோடு இன்று பிக் பாஸ் புரோமோவில் அங்கு பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெறுவது தெளிவாக தெரிந்தது. அதன் மத்தியில் பலரும் போட்டோக்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர்களுடன் இணைந்துகொண்டு மறக்க முடியாத தருணங்களையும், புதிய உறவுகளையும் கூறி போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர் பாவணி அமீரோடு போட்டோ எடுத்துக்கொள்ள அமீரை அழைத்துள்ளார். இதனால் அங்கு சுற்றியிருந்த சக போட்டியாளர்கள் ஒரே கோஷம் எழுப்பினர். இதற்கு முன்னதாக அமீர் பாவணிக்கு  முத்தமிட்டதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவர்களுக்குள் மீண்டும் காதல் தொடங்கி விட்டதோ நெட்டிசன்கள் இணைய தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/pP3iaIa2Af4″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment