கேபிஒய் சரத்துக்கு அவருடைய மனைவி வழங்கிய அன்பு பரிசு!

d3363b586fec47e9f7d3020310ceda22

குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்தவர்களில் ஒருவர் சரத் என்பது தெரிந்ததே. இவர் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் தனது மனைவியை காதலித்து குறித்தும் தனது மனைவி தனக்காக பல ஆண்டுகள் காத்திருந்து குறித்தும் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சரத் மற்றும் கிருத்திகா ஜோடி அனைவரையும் கவர்ந்து அதிக புள்ளிகளுடன் உள்ளனர்.

இந்த நிலையில் சரத்தின் மனைவி கிருத்திகா தனது கணவருக்கு புத்தம் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த காருடன் சரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சரத்துக்கு அவருடைய சக நண்பர்களான புகழ், பாலா, ரக்சன் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.