பெற்றோரின் அன்பு கிடைக்காத விரக்தி.. பிளஸ் 2 மாணவி தற்கொலை..!!!

ராமநாதபுரத்தில் பெற்றோரின் அன்புக்கு ஏங்கி கிடைக்காமல் போன விரக்தியில் மாணவி ஒருவர் விபரீத முடிவு எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ரோமன் ஜர்ஜ் பகுதியை சேர்ந்தவர் பெலிசியா. இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13 -ம் தேதி ரயில் நிலையம் முன் துண்டுதுண்டாக மாணவியில் சடலம் கிடந்துள்ளது.

இதனிடையே உடலை கைப்பற்றிய போலீசார் மாணவியில் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என தீவிர விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மாணவி தற்கொலை செய்து கொண்டது உறுதியான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சூழலில் உயிரிழந்த மாணவி பெலிசியா பெற்றோரின் அன்புக்காக நிறைய ஏங்கியதாக அவரது நண்பர்களிடன் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே சமயம் மாணவியின் தாய் வேறோரு திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த மன அழுத்ததில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதன் படி, பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் மாணவி தற்கொலை செய்துகொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பருவநிலையில் பெற்றோரின் ஆதர முழுமையாக கிடைக்காமல் இருப்பதால் குழந்தைகளில் பாதை மாறுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.