Connect with us

காதல் மனைவியை கத்தியால் குத்திய கஞ்சா காதலன்!! நடந்தது தெரியவில்லை;

கொலை

செய்திகள்

காதல் மனைவியை கத்தியால் குத்திய கஞ்சா காதலன்!! நடந்தது தெரியவில்லை;

தொடர்ந்து காதல் திருமணத்தினால் ஏற்படும் கொலைகள் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் தற்போது காதல் கணவர் மனைவியை கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கணவருடன் ஆந்திராவுக்கு சுற்றுலா சென்ற புது மணப்பெண் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சித்தூர் அருகே உள்ள கைலாச கோனே அறிவிக்கு சென்னையைச் சேர்ந்த மதன் தமிழ் செல்வி கடந்த மாதம் சுற்றுலா சென்றனர். மதன் மட்டும் சென்னை நிலையில் தமிழ் செல்வி இன்னும் வீடு திரும்பவில்லை.

ஒரு மாதம் ஆகியும் தமிழ்ச்செல்வி வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் தமிழ்ச்செல்வியை காதலித்து திருமணம் செய்த மதத்தை பிடித்து போலீசார் விசாரித்த போது கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்தார்.

கோனேரி அருவியில் கஞ்சா போதையில் மனைவியை கத்தியால் குத்தியதாகவும் அதன் பின் நடந்தது தெரியவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார். கோனேரி அருவி அமைந்துள்ள வனப்பகுதியில் ஆந்திரா போலீசார் உதவியுடன் தமிழ்நாடு போலீசார் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனப்பகுதியில் அழுகிய நிலையில் தமிழ் செல்வி உடல் கிடப்பதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தமிழ்ச்செல்வி உடலை மீட்டு வருவதற்காக செங்குன்றம் போலீசார் ஆந்திரா விரைந்து சென்றுள்ளனர்.

தமிழ்ச்செல்வியை அவரது கணவர் மதன் கத்தியால் குத்திக்கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தமிழ்ச்செல்வியின் கணவர் மகனை கைது செய்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மதனிடம் நடத்தப்படும் விசாரணையில் முடிவிலேயே கொலை நடந்தது எப்படி என தெரியவரும் என்றும் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top