மாநகர பேருந்துகளில் ஒலிப்பெருக்கி.. உதயநிதி ஸ்டாலினின் தொடங்கி வைத்தார்!!

பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகளை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பல்லவன் இல்லத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் பேருந்து நிறுத்ததில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பேருந்து சேவையை தொடங்கிவைத்தார்.

குழந்தை பிறந்ததும் விபரீத முடிவு!! இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

இதில் பேருந்து நிறுத்தம் 300 மீட்டர் தூரம் இருக்கும் போதே நிறுத்ததின் பெயர் ஆங்கிலம், தமிழ் என 2 மொழிகளிலும் ஒலிபரப்ப செய்யப்படுகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் அடுத்தடுத்த நிறுத்தங்களை எளிமையாக தெரிந்து கொள்வார்கள்.

இத்தகைய சேவையானது ரயில்களில் இருந்து வருகிறது. தற்போது பேருந்துகளிலும் ஒலிபெருக்கி சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்தகைய திட்டத்தினை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

சென்னையை உலுக்கிய கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் இந்து சமயநிலையை துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், முதற்கட்டமாக 150 மாநகர பேருந்துகளில் இத்தகைய சேவை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.