பயங்கர சத்தம் ; 5 ஆம் வகுப்பு மாணவன் மரணம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தோப்பூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயதுடைய மாணவன் அஜய் குமார்.

இந்த சிறுவன் பள்ளி விடுமுறை தினம் காரணமாக பொழுது போக்கிற்க்காக நேற்று பள்ளி சென்ற மாணவன் பள்ளி வளாகத்தில் விளையாடி வந்துள்ளார். அந்த நேரத்தில் ஏற்பட்ட பயங்கர சத்தத்தின் காரணமாக மயங்கி விழுந்துள்ளார்.

அந்த நேரத்தில் வந்த பயங்கர சத்தம் பாறைகளுக்கு வைத்த வெடி சத்தமா அல்லது வேறு ஏதும் சத்தமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அந்த பயங்கர வெடி சத்தத்தை கேட்ட மாணவன் அஜய் குமார் சம்பவ இடத்திலே மயங்கி விழுந்துள்ளார்.

விழுந்த நேரத்தில் அவருக்கு தலையில் பலமாக அடி பட்டுள்ளது. இதை பார்த்த சக நண்பர்கள் இதை மற்றவரிடம் தெரிவித்து அவர்களுக்கு உடனே முதலுதவி செய்துள்ளனர்.

அதை தொடர்ந்து அவரை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருந்த நிலையில் இன்று அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.. புலம்பும் TTF வாசன்!

மாணவன் இறந்த காரணம் குறித்து தெளிவு படுத்த கூறி  அவரது உறவினர்கள் மாணவனின் உடலை வாங்க மறுத்து வருகின்றனர். வெடி சத்தத்தில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.