News
அமெரிக்காவில் மலர்கிறது தாமரை: பாஜகவினர் மகிழ்ச்சி
இந்தியா முழுவதும் தாமரை மலர்ந்தாலும் தமிழகத்தில் தாமரை மலரவில்லை என்பதால் அதை மலர வைக்க தமிழக பாஜக தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்
இந்த நிலையில் திடீரென பாஜக தொண்டர்கள் தங்களது சமூக வலைதளங்களில் அமெரிக்காவில் தாமரை மலரப் போகிறது என்பது குறித்த பதிவுகளை சமூக வலைத்தளங்களில் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நேற்று அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் என்று அறிவிக்கப்பட்டதால், கமலா என்றால் தாமரை என்று பொருள் என்பதால் அமெரிக்காவின் விரைவில் தாமரை மலரும் என்று பாஜகவினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த பதிவுகள் மிகப்பெரிய அளவில் பகிரப்பட்டு வருவதால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் தாமரையை மலர வைப்போம் என்று ஒருபக்கம் காமெடியாக பார்க்கப்படுகிறது என்றாலும் இன்னொரு பக்கம் சீரியசாக பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
