Connect with us

தலை நிறைய மல்லிகை பூ.. கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த நயன்தாரா!!

nayam

பொழுதுபோக்கு

தலை நிறைய மல்லிகை பூ.. கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த நயன்தாரா!!

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் விரைவில் திருப்பதியில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போழுது தஞ்சாவூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோயிலில் இருவரும் சென்று பொங்கல் வைத்து வழிப்பட்டார்கள்.

nayan

தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் உள்ள மேலவழுத்தூர் கிராமத்தில், ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் என்ற கோயில் உள்ளது. இக்கோயில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வக் கோயிலாம். அங்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து வந்து பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்துள்ளனர்

நயன்தாரா வந்திருப்பதை அறிந்த பொதுமக்கள் ஆண்கள்,பெண்கள் ,சிறுவர்கள் என பலர் கோயிலில் முன் திரண்டனர். அனைவரும் நயன்தாராவை பார்த்து மகிழ்ச்சியில் கொண்டாடினர். கூட்டம் கூடியதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு போலீஸார் குவிந்தனர். ஊர் மக்களிடம் சகஜமாக சிரித்து பேசியபடியே பொங்கல் வைத்தார் நயன்தாரா.

நயன்தாரா பொங்கல் வைக்க பொங்கல் பானையில் அரிசியை அள்ளிப் போட, அப்போது சுற்றி நின்றவர்கள் குலவையிட்டனர். கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இருவரும் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

nayan 2

இதனைத் தொடர்ந்து இருவரும் கும்பகோணம் சென்றதுடன் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளனர். விக்னேஷ் சிவன்,நயன்தாரா இருவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை சன்னதியில் தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.கணவன், மனைவி ஒற்றுமையாக வாழ்வதற்கான வழிப்பாட்டு ஸ்தலமாகக் கூறப்படும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயிலிலும் இருவரும் சாமி தரிசனம் செய்தனர் .

இந்த கோயில்,பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியத்தை தரக்கூடியது. கணவன்,மனைவி இடையே சண்டை குழப்பம் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான வழிப்பாட்டு ஸ்தலம் என்பது ஐதீகம். இங்கு வந்து வழிப்பட்டால் தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என நம்பிக்கை . அத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருந்து சாமி தரிசனம் செய்துள்ளார்கள்.

கும்பகோணம் கோயிலில்  நயன்தாரா -விக்னேஷ் சிவன்

இதற்கு இடையில் நயன்தாரா ,விக்னேஷ் சிவன் ஜோடி ஆதி கும்பேஸ்வரர் கோயில் , மங்கலம் யானையிடம் வாழை பலம் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றனர். அப்பொழுது நயன்தாரா அவர்கள் யானைக்கு பழம் கொடுக்க மிகவும் பயந்தபடி இருக்க விக்னேஷ் உடனே அந்த பழத்தை வாங்கி யானைக்கு கொடுத்துள்ளார்.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது இந்த டான்ஸ் மாஸ்டரா ??

 

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top