Connect with us

நூல் விலை உயர்வால் ரூ.5,000 கோடி ஆர்டர்கள் இழப்பு – ஏற்றுமதியாளர்கள் வேதனை!

202012040928399242 Yarn prices rise by Rs 10 per kg SECVPF

தமிழகம்

நூல் விலை உயர்வால் ரூ.5,000 கோடி ஆர்டர்கள் இழப்பு – ஏற்றுமதியாளர்கள் வேதனை!

நூல் விலை உயர்வால் ரூ.5,000 கோடி ஆர்டர்கள் இழப்பு – ஏற்றுமதியாளர்கள் வேதனை!

தொடரும் நூல்விலை ஏற்றம் காரணமாக திருப்பூர் பின்னலாடையில்  ரூ. 5,000 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், போட்டி நாடுகள் ஆடர்களை கைப்பற்றி வருவதாகவும் ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த 1- ஆம் தேதி நூல்விலை கிலோவிற்கு 30 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 350 ரூபாய்கு விற்பனையாகி வந்த நூல்விலை தற்போது 400 ரூபாயினை கடந்து 435 வரை உயர்ந்து விற்பனையாகிறது.

பனியன் தயாரிக்க மிக முக்கியமான மூலப்பொருளான நூல் விலை நிலையில்லாமல் ஏறி வருவதால் துணிகளுக்கு உரிய நிர்ணய விலையினை செய்யமுடியாமல் ஏற்றுமதியாளர்கள் குழம்பி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மூலப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் ஆர்டர்கள் குறைந்து வருவதாகம் பெற்ற ஆர்டகளை முடிக்க முடியாமலும் இருப்பதாக  பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் , உற்பத்தியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

குவிண்டால் பஞ்சின் விலை தற்போது ஒரு லட்சத்தை தாண்டி விற்பனையாகுவதால் இதனை கட்டுப்படுத்த அரசு  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top