தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா படம் உலகம் முழுவதும் சுமார் 300 கோடி வசூல் செய்து வசூல் மழையை பொழிந்து வருவதாக ஆங்காங்கே செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் புஷ்பா படம் மூலம் தயாரிப்பாளர் நல்ல லாபத்தை ஈட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் புஷ்பா படத்தை வாங்கி தாங்கள் நஷ்டமடைந்து விட்டதாக சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் தான் சில விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த செய்தியால் தெலுங்கு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது புஷ்பா படம் வெளியான சில வாரங்களிலேயே கொரோனா பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புஷ்பா படத்தை வெளியிட்ட பல இடங்களில் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைத்த நிலையில் சில இடங்களில் மட்டும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
இதுதவிர ஆந்திராவில் தியேட்டர் டிக்கெட் கட்டண பிரச்சனை நிலவி வருகிறது. இதன் காரணமாகவும் புஷ்பா படத்தின் வசூல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த நஷ்டத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமே ஏற்றுக்கொண்டு நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு செலுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உலகம் முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்த ஒரு படம் மூலம் தாங்கள் நஷ்டம் அடைந்திருப்நதாக விநியோகஸ்தர்கள் கூறி நஷ்ட ஈடு கேட்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.