இந்திய அணிக்கு என்னதான் ஆச்சு? வரிசையாக விக்கெட்டை இழந்து தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி!

இன்றைய தினம் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்கா-இந்தியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு 297 இலக்காக நிர்ணயித்தது.

sa odi 1

அதிலும் குறிப்பாக இன்றைய தின போட்டியில் இரண்டு தென்னாப்பிரிக்கா பிளேயர்கள் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி மிகுந்த நெருக்கடியில் களமிறங்கியது.

அதிலும் குறிப்பாக முதல்முறையாக கேப்டன் பொறுப்பில் களமிறங்கினார் குட்டி கோலி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கே.எல்.ராகுல். ஆனால் எதிர்பாராதவிதமாக இன்றைய நாள் அமைய வில்லை. அவர் சொற்ப ரன்களில் அவுட்டானார்.

அதன்பின்னர் ஷிகர் தவானும் விராட் கோலியும் நிதானமாக தங்களது பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஆயினும் அதற்கு பின்பு வந்த பேட்ஸ்மேன்கள் வரிசையாக சில ரன்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்திய அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி வெறும் 265 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிலும் 8 விக்கெட்களை இந்திய அணி இழந்தது. இதனால் சவுத் ஆப்பிரிக்கா அணி முப்பத்தி ஒரு ரன்கள் வித்தியாசத்தில் இன்றைய தினம் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...