
தமிழகம்
டீசல் விலை ரூ.100ஐ கடந்தது: கேக் வெட்டி கொண்டாடிய வாகன உரிமையாளர்கள்
டீசல் விலை ரூ.100ஐ கடந்தது: கேக் வெட்டி கொண்டாடிய வாகன உரிமையாளர்கள்
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்றும் நேற்றைய விலையிலேயே விற்பனை ஆகிறது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் தேனியில் டீசல் விலை 100 ரூபாயை கடந்து உள்ளதை அடுத்து மன வேதனையை வெளிப்படுத்தும் வகையில் வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் கேக் வெட்டி நூதன முறையில் கொண்டாடிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பே பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுமே நூறு ரூபாயைக் கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக மன வேதனை அடைந்த பெரியகுளம் பகுதி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கேக் வெட்டி நூதனமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து லாரி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது டீசல் உயர்வு காரணமாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நூறு ரூபாய்க்கு மேல் டீசல் விலை உயர்ந்துள்ளதால் மன வேதனையை வெளிப்படுத்தும் வகையில் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம் என்றும், அப்படியாவது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசு குறைப்பார்களா? என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம் என்றும் கூறினார்.
