விடிய விடிய சோதனை!! மணீஷ் சிசோடியாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்வதற்கு சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

மதுவிலக்கு விதிமுறைகளில் மாற்றம் செய்ததில் முறைகேடு நடந்து இருப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக அரசு ஏற்றுவந்த மதுகொள்கைகளை தனியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் நேற்று முன் தினம் துணை நிலை ஆளுநர் பரிந்துரையின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இத்தகைய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முறைகேடு புகாரில் முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ தற்போது லிக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

மேலும், மதுவிலக்கு விதிமுறைகளில் உரிமம் தொடர்பாக முறைகேடு செய்ததாகவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment