தமிழகத்தின் முந்தைய அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் இராஜேந்திர பாலாஜி. அப்பொழுது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி வரை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் பேரில் அவரிடம் பணம் குடுத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் இராஜேந்திர பாலாஜி உட்பட நான்கு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ளஅவரை பிடிக்க 8 தனிப்படை குழு அமைத்து பெங்களூர், சேலம் மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர். இதுவரை அவரை கண்டுபிடித்து கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.