Connect with us

டீஸரை பார்த்து அழுத சிங்கிள்ஸ் என்ன ஆகப்போறாங்களோ? 28ஆம் தேதி திரையில் வெளியாவதாக அறிவிப்பு!

kaathu vaakkula rendu kaathal 1200

பொழுதுபோக்கு

டீஸரை பார்த்து அழுத சிங்கிள்ஸ் என்ன ஆகப்போறாங்களோ? 28ஆம் தேதி திரையில் வெளியாவதாக அறிவிப்பு!

டீஸரை பார்த்து அழுத சிங்கிள்ஸ் என்ன ஆகப்போறாங்களோ? 28ஆம் தேதி திரையில் வெளியாவதாக அறிவிப்பு!

தமிழ் சினிமாவிலேயே அதிக அளவு கடினமாக உழைத்து இன்று மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு உள்ளவர் என்று பொதுமக்களை கேட்டாலும் கூட கூறும் ஒரே பதில் விஜய்சேதுபதி தான்.

அந்த அளவிற்கு விஜய்சேதுபதியின் கடின உழைப்பு மற்றும் பொறுமையும் அவரை இன்று உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது இந்த நிலையில் அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இந்த திரைப்படத்தில் இதற்கு முன்னதாக அவருக்கு ஜோடியாக நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் மக்கள் நாயகன் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி கொண்டு வரும் சமந்தாவும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தினை லேடி சூப்பர் ஸ்டார் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூவர் நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்த டீசரை கண்ட சிங்கிள்ஸ் மிகவும் வேதனை அடைந்தனர். அந்த அளவிற்கு விஜய் சேதுபதியின் லவ் ஸ்டோரி இந்த படத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதியில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 100% திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top