ஸ்காட்லாந்தின் அபெர்டீனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பலத்த காற்று வீசியதால் வலது புறம் மற்றும் இடது புறமும் உள்ள சக்கரங்கள் தரையில் உரசியது.
இதனால் விமானம் கவிழும் அளவுக்கு சென்றது. இருப்பினும் விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உடனடியாக வானை நோக்கி விமானம் பறந்திருக்கிறது.
இந்த சம்பவத்தினால் BA A321 விமானத்தின் ஆபத்து தவிர்க்கப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தால் எந்த பயணிகளும் பாதிக்கப்படவில்லை என கூறியுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.