Connect with us

விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றியை தட்டிக்கழித்த லோகேஷ் ! அசால்டா சொன்ன பதில் ..

new project 2022 03 14t065647 692

பொழுதுபோக்கு

விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றியை தட்டிக்கழித்த லோகேஷ் ! அசால்டா சொன்ன பதில் ..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளிவந்தது. இப்படம் வெளிவந்த நாள் முதல்இன்று வரை ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் நிறைந்த காட்சிகளாக வளம் வந்து வசூலை குவித்தது

வெளியான 11 நாள்களில் ரூ. 300 கோடி வசூலை அள்ளியது மட்டுமல்லாமல் தற்போது உலக அளவில் ரூ. 625 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. கமல் ஹாசன் நடித்த படங்களில் அதிக வசூலைக் ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் பெற்றுள்ளது.

image 74 1 166273016816x9 1

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.படத்தின் பத்து நிமிடம் தான் சூர்யா வந்தாலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக திறமையாக நடித்துள்ளார்.

அடுத்து கடந்த சில வாரம் முன் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் விக்ரம் படம் வெளியாகியது. ஆனால் அப்போது கூட திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விக்ரம் திரைப்படம் 100ஆவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. 100ஆவது நாள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக புதிய போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

100DaysofVikram

அதில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, பகத் பாசில், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் நூறாவது நாளை கொண்டாடி உள்ளனர்.

கொரியன் படங்களை கிண்டலடிக்கும் சிவகார்த்திகேயன்! வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

ஆனால் விக்ரம் படத்தின் 100-வது விழாவை லோகேஷ் கனகராஜ் கொண்டாடாமல் ஒரு காபி ஷாப் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துள்ளார். அப்பொழுது விக்ரம் படத்தின் 100-வது நாள் விழாவுக்கு வராததன் காரணத்தை கேட்டதற்கு அவர் எனக்கு வேறு சில முக்கியமான வேலைகள் இருக்கிறது என அசால்டாக கூறியுள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் முக சலிப்பை ஏற்படுத்தியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top