Connect with us

நடிகர் கமலை பழிவாங்கிய லோகேஷ் !! என்ன நடந்திருக்கும் ??

kamall 1

பொழுதுபோக்கு

நடிகர் கமலை பழிவாங்கிய லோகேஷ் !! என்ன நடந்திருக்கும் ??

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் விக்ரம். இந்த படத்தில் பகத்பாசில் மற்றும் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது எங்கு பார்த்தாலும் விக்ரம் படத்தை பற்றிய பேச்சுதான் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் இருகின்றது.

n

இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ளது.சமீபத்தில் இப்படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் கசிந்தது.மேலும் இந்த படத்தில் சுவாரஸ்யம் தற்போது வரை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை தான் கமல் படத்திற்கு முதல்முறையாக அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடிய ‘பத்தல… பத்தல…’ எனும் பாடல் மே 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளது .இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க உலக நாயகன் கமல் வைத்து படம் எடுப்பது என்ற விஷயம் மிக எளிதானது அல்ல.கமல் அவர்கள் மிகப்பெரிய சினிமா விரும்பி மட்டும் அல்லாமல் தலைசிறந்த கலைஞரும் கூட. ஒவ்வொரு படத்திலும் தன்னை தனித்துவப்படுத்திக்கொள்ள மிகவும் உழைப்பவர்,பலவேடங்களில் நடிப்பது குரலை மாற்றுவது என நடிப்பின் மறுமுகத்தை காட்டியுள்ளார் .

kama lo

அவரின் நடிப்புத்திறமை உச்சத்தில் இருக்க தற்போழுது லோகேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் விக்ரம் படமானது அவரின் நடிப்பு திறமைக்கு சவால் விடும் அளவிற்கு உள்ளது. பொதுவாக லோகேஷ் இயக்கும் படங்களில் வசனங்களை அவர் முன்னதாக கொடுப்பது இல்லை .படப்பிடிப்பு தளத்திற்கு காலை ஹீரோ வந்ததும் கொடுப்பதுதான் அவர் வழக்கம். அதுபோல படத்தின் காட்சிகளும் திருப்தி ஆகும் வரை திரும்ப திரும்ப எடுப்பது வழக்கம் .

இது எல்லாம் விக்ரம் படத்திலும் நடந்துள்ளது,லோகேஷ் , கமல் அவர்களை தனியாக சந்தித்து படப்பிடிப்பின் போது ரிடெக் எடுக்கலாமா அதில் உங்களுக்கு சம்மதமா … என கேள்வி கேட்டுள்ளார்,அதற்கு கமல் அவர்களும் தன்மையாக காட்சிகள் சிறப்பாக அமையும் வரை டெக் எடுக்கலாம் என கூறியுள்ளார்.

ஷங்கர் மகள் நடிக்கும் 2ம் படம் !!.. யாரு ஹீரோ தெரியுமா ??..

அதை மனதி வைத்து லோகேஷ் அவர்களும் படத்தை சிறப்பாக முடிக்க வேண்டும் என்பதற்காக அதிகம் கவனம் செலுத்த கமல் நடித்த சில காட்சிகள் ரிடெக் எடுத்தார்களாம்.அதில் ஒரு காட்சி மட்டும் 12 முறை கூட எடுத்ததாக லோகேஷ் தெரிவித்துள்ளார். கமல் கூறும் வசனத்தில் அவ்வப்போது சின்ன மாறுதல் கொடுத்து குரலை மாற்றி மாற்றி பேசவைத்து ஒவ்வொரு டேக்கும் கச்சிதமாக அமைந்து தனக்கு திருப்தி ஆகும் வரை அனைவரையும் நடிக்கவைத்துளார் லோகேஷ்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top