Connect with us

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் பாடலை வெளியிட்ட லோகேஷ்!

parthiban iravin nizhal movie songs audio released 1654613447 1

பொழுதுபோக்கு

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் பாடலை வெளியிட்ட லோகேஷ்!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவருபவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தான். அவரின் ஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து இரவின் நிழல் படத்தை நடித்து இயக்கியுள்ளார்.

உலகிலேயே முதன்முறையாக நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இவரது இரவின் நிழல் உருவாகியிருக்கிறது. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைப்படம்’ என்ற பெருமையுடன் இந்த படம் ஜூலை 15இல் வெளியாக இருக்கிறது.

parthiban iravin nizhal movie release date announcement 1652967195 1 1

இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள். ‘அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ளது.

இந்நிலையில், படத்தில் புரொமோஷனுக்காக இதில் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பெயரையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்தப் படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

795122

அதைத்தொடர்ந்து இந்தப் படத்திலிருந்து பாபம் செய்யாதிரு என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

ராம் சரண் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவா? அதுவும் முக்கிய வேடத்திலா!

பார்த்திபன் எழுதியுள்ள இந்தப் பாடலை நிரஞ்சனா ரமணன் கீர்த்தனா வைத்தியநாதன் இணைந்து பாடியுள்ளனர் என்பதுய குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top