
Entertainment
கமல் முகத்தில் கை வைத்த லோகேஷ் !! அவ்வளவு தைரியம் வந்துவிட்டதா??..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. ‘பத்தல பத்தல’ என தொடங்கும் அந்த பாடலை கமலே பாடி, எழுதியும் இருந்தார். பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
விக்ரம் படத்தின் இசைவெளியிட்டு விழா மற்றும் டிரைலர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் தனக்கு நிகர் யாரும் இல்லை என போட்டி போட்டுக்கொண்டு தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் அவர்கள் நடிகர் கமலின் தீவிர ரசிகர் ஆவார்,ஒரு ரசிகராக கமலை ரசிப்பது வேறு இயக்குனராக படத்தை இயக்குவது வேறு,இருந்தாலும் நான் ரசித்து தலைவரின் படத்தை தானே இயக்கம் போது இன்னும் கூடுதல் கவனத்துடன்தான் இருந்தார்.இந்த பிழையும் நடக்காதவாறு மிக கவனமாக இருந்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் லோகேஷ் அவர்களே கமலுக்கு மேக்கப் போட்டுள்ளாராம். கமலிற்கு மேக்கப் போடா ஏற்பாடு செய்திருந்த நபர் கோவிட் காரணமாக வரமுடியாமல் இருந்ததாம். இந்த படத்தில் கமலின் முகத்தில் இரத்த கரை உள்ளவாறு மேக்கப் போட வேண்டியிருந்ததாம் ,உடனே லோகேஷ் கமலுடம் நான் உங்களுக்கு மேக்கப் போட்டுவிடவா என கேட்டுள்ளார்,அதற்கு அவரும் சரி சொல்ல லோகேஷ் கமலுக்கு தொடர்ந்து 32 நாள் மேக்கப் போட்டுள்ளாராம் .
தளபதி 66 படத்தில் விஜய்க்கு இரட்டை வேடமா ??.. அப்டேட் கொடுத்த பிரகாஷ்ராஜ்!!..
