
Entertainment
சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்! எவ்வளவு தெரியுமா?
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற 4படங்களை இயக்கிய முன்னணி இயக்குனராக அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ்.
தற்போழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்திற்கு நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.மலையாளத்தில் விக்ரம் படத்திற்கு பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் விக்ரம் படத்தை ரஜினிகாந்த் ரசித்துப் பார்த்திருக்கிறார். படம் அருமையாக இருக்கிறது என படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.மேலும் சினிமாவின் பல முன்னணி ஹீரோ,ஹீரோயின்கள் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
இந்த வெற்றியால் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் உயர்ந்துள்ளது.தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ் வளம் வர தொடங்கியுள்ளார்.
குழந்தையை காப்பாற்ற துடிக்கும் தாயாக நயன்தாரா! 02 டிரெய்லர்..
