விஜய்க்கும் எனக்கும் எந்த வாய்க்கா தகராறும் இல்லை.. வெளிப்படையா சொன்ன லோகேஷ் கனகராஜ்.. அந்த எல்சியூ..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சாண்டி, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்னும் இரு வாரத்தில் ரிலீசாக உள்ளது.

சமீபத்தில் லியோ படத்தின் டிரைலர் வெளியாகி இரண்டு நாட்களில் 38 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் தளத்தில் முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

எனக்கும் எங்க அண்ணனுக்கும் பிரச்சனையா?

இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனக்கும் நடிகர் விஜய்க்கும் சண்டை என பரவிய வதந்தியை நானும் விஜய் அண்ணாவும் ஒன்றாக சேர்ந்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம் என்று கூறி ஒட்டுமொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகை திரிஷாவுக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனை என்றும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் க்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனை என்றும் லியோ படத்தை வகையில் ஏகப்பட்ட தொடர்ந்து நடிகர் விஜயின் ஹேட்டர்கள் பரப்பி வருகின்றனர்.

விஜய்யை கட்டம் கட்டும் ரஜினி, அஜித் ரசிகர்கள்

ஒரு பக்கம் அஜித் ரசிகர்களும் ஒரு பக்கம் ரஜினி ரசிகர்களும் தொடர்ந்து லியோ படம் குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் நெகட்டிவ் பரப்பும் விதமாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஜெயிலர் படத்தின் ரிலீஸ் சமயத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பியதன் விளைவாகவே தற்போது ரஜினி ரசிகர்கள் இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

ரசிகர்களுக்கிடையே நடைபெறும் சண்டை காரணமாக முன்னணி நடிகர்களின் பெயர் தான் டேமேஜ் ஆகி வருகிறது. நீ ஒரு நடிகனை இழிவுபடுத்தி ட்ரோல் செய்தால், இன்னொருவர் உனக்கு பிடித்த நடிகரை அதைவிட கேவலமாக ட்ரோல் செய்வார் என்பதை மறந்துவிட்டு ரசிகர்கள் மாறி மாறி தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கே வில்லன்களாக மாறி வருகின்றனர்.

ரசிகர்களின் முட்டாள்த்தனம்

அதன் காரணமாகத்தான், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடைபெறவில்லை என்றும் கூறுகின்றனர். ரோகினி தியேட்டரில் நடந்த படு அயோக்கியத்தனமான சம்பவமும் ரசிகர்களின் வெறித்தனத்தை காட்டுகிறது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியில் தெளிவாக விஜய்க்கும் தனக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் அந்த வதந்தியை பார்த்து தாங்கள் இருவருமே சிரித்தோம் எனக்கூறியுள்ளார். மேலும், சொந்த அண்ணன் போலவே நடிகர் விஜய் தொடர்ந்து பயணித்து வருகிறார் என்றும் கூறி இருவருக்கும் இடையே உள்ள பாண்டிங்கையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews