Connect with us

ஊழல் வழக்கு.. ‘மாஜி’ முதல்வருக்கு செக் வைத்த லோக் ஆயுக்தா!!

Yeddyurappa

செய்திகள்

ஊழல் வழக்கு.. ‘மாஜி’ முதல்வருக்கு செக் வைத்த லோக் ஆயுக்தா!!

பிடிஏ குடியிருப்பு கட்டடத்தில் ஊழல் நடந்து இருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் குடியிருப்பு பணிகள் கட்டுவதற்கான ஒப்பந்த பணிகளில் ராமலிங்கம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அப்போது எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, சட்டமன்ற உறுப்பினர் சோமசேந்திரா உள்ளிட்டோர் கையூட்டு பெற்றதாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். அதன் பேரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்து போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வருகின்ற நவம்பர் 2-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் படி, லோக் ஆயுதா காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் எடியூரப்பா குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top