ஒரு குட்டி தூக்கம்… கண்ண திறந்து பார்த்தா வெளிநாட்டில இருந்த லோடுமேன்…

பொதுவாக குழந்தைகள் காலையில் தூங்கி விட்டு மாலையில் எழுந்திருக்கும்போது மறுநாள் பிறந்துவிட்டது என்ற குழப்பத்தில் சுற்றித்திரியும். குழந்தைகள் மட்டுமின்றி பலரின் வாழ்வில் நடந்த ஒரு தவிர்க்க முடியாத சம்பவமாகும்.

ஆனால் ஒருவர் அசதியால் தூங்கி கண்விழித்து பார்க்கும்போது மற்றொரு நாட்டில் இருந்தது அவரையே வியக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் மும்பை விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளது.

அதன்படி மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கேஜ் களை கையாளும் லோடுமேன் அசதியில் விமானத்தின் சரக்கு பெட்டியில் உறங்கியது அவரையே வெளிநாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

விமானம் பறந்தபோது தான் சரக்கு பெட்டியில் இருப்பதை உணர்ந்த லோடுமேன் 6 மணி நேரத்திற்கு பின்பு அபுதாபியில் தரையிறங்கினார். அங்கு சரக்கு பெட்டியை திறந்து பார்த்தபோது லோடுமேன் இருந்தது தெரிய வந்தது.

இதனால் செய்வதறியாது தெரியாமல் இருந்த லோடுமேனை அங்குள்ள அதிகாரிகள் விசாரித்து பின்னர்தான் மும்பையில் இருந்து வந்தது தெரியவந்தது. உடனே அவர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதே விமானத்தில் மீண்டும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment