லாக்கப் கைதி மரணம்: மாஜிஸ்திரேட் விசாரணை!!

கடந்த சில நாட்களாவே நம் தமிழகத்தில் விசாரணைக் கைதி மரணம் அடையும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 21-ம் தேதி ஓட்டேரி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் காரை உடைத்து விட்டதாக ஆகாஷ் என்ற இளைஞர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

அதன் பேரில் ஓட்டேரி காவல்துறையினர் ஆகாஷை பிடித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஆகாஷ் தாக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சூழலில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணத்திற்கு காவல்துறையினரை காரணம் என உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எழும்பூர் 10-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் லட்ஷ்மி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.