அருப்புக்கோட்டையில் லாக்கப் மரணம்… ஐகோர்ட் கிளை புதிய உத்தரவு!!

அருப்புக்கோட்டை நகர காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் தங்கப்பாண்டியின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கில், தங்க பாண்டியன் உடலை 2 நாட்களில் பெற்றுக்கொள்ள ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த தங்கமாரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் தனது இளைய மகன் தங்கபாண்டிக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், கடந்த 13-ம் தேதி தனது மகளை விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறுநாள் செப்,14-ம் தேதி அதிகாலையில் போனில் தொடர்புகொண்ட அருப்புக்கோட்டை நகர காவல்துறையின், விருதுநகர் அரசு மருத்துவ மனைக்கு செல்லுமாறு கூறினர். அங்கு மகன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 17-ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் பதினோரு இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையானது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுகுமாரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும், இருப்பினும் இறந்தவரின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் முன்வரவில்லை என கூறினார்.

அப்போது பேசிய நீதிபதி தங்க பாண்டியன் உடலை 2 நாட்களில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் காவல்துறையினர் அடக்கம் செய்ய வருவார்கள் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.