
Tamil Nadu
‘லாக்கப் டெத்’; ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க அரசு அஞ்சுகிறதா?
கடந்த சில மாதங்களாக லாக்கப் டெத் என்றழைக்கப்படுகின்ற மரணம் நம் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் அரங்கேறிக் கொண்டுதான் வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஹைகோர்ட் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிலும் குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க அரசு அஞ்சுகிறதா? என்று கேள்வியை கேட்டுள்ளார் நீதிபதி. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிரான புகாரை விசாரிக்க உள்துறை செயலாளர் டிஜிபி தலைமையிலான குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இத்தகைய கேள்வி எழுப்பப்பட்டது.
2018 ஆம் ஆண்டு கணக்கின்படி காவல்நிலைய மரணங்களில் தென் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்று மனுதாரர் சுட்டிக்காட்டி கூறியுள்ளார். 71 மரணங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நடந்தும் ஒரு வழக்கில் கூட தண்டனை விதிக்கப்படவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார்.
எந்த காரணத்திற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அதற்கு எதிராக தமிழக அரசின் சட்டம் உள்ளது என்று ஹைகோர்ட் நீதிபதி கூறினார். விசாரணை கைதிகளை இரக்கம் இல்லாமல் தாக்குவது, மரணம் விளைவிப்பது காவல்துறையின் பேதலித்த மனநிலையைக் காட்டுகிறது என்றும் நீதிபதிகள் கூறினார்.
ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க அரசு அஞ்சுகிறதா? என ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விக்னேஷ் மரணம் விவரம் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதி கூறினார். அதனால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கவில்லை என்று ஹைகோர்ட் தலைமை நீதிபதி கூறினார்.
