ஊரடங்கு: காவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இவற்றிற்கெல்லாம் கட்டாயம் அனுமதி வழங்க வேண்டும்;

ஊரடங்கு தொடங்கினால் பல இடங்களில் வாகன போக்குவரத்திற்கு பெரும் தடை விதிக்கப்படும். மீறினால் அவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்தியாவில் ஒரு சில இடங்களில் ஊரடங்கு காரணமாக கொண்டு காவல்துறையினர் கடுமையாக தாக்குதலில் ஈடுபடுவார்கள். அவர்களின் செயல் அடுத்தடுத்து இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வரும்.

இந்த சூழலில் ஊரடங்கு காலகட்டத்தில் காவல்துறையினருக்கு சில முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய, மாநில அரசு துறை, நீதித்துறை பணியாளர்களை அடையாள அட்டையை பார்வையிட்டு அவர்கள் பயணம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மின்சாரம், பத்திரிக்கை, மருத்துவம், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய விளை பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்களை தடை செய்யக்கூடாது என்றும் காவலர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு நாளான ஜனவரி 9ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உணவு விநியோகம் மின்வணிக பணியாளர்களை அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளது. அரசு நுழைவு தேர்வுகள் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காட்டினால் அவர்களை அனுமதிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

விமானம், ரயில், பேருந்து நிலையங்களுக்கு செல்பவர்களையும் அங்கிருந்து வரும் வரையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. வேலைக்கு செல்வோர் பணி முடித்து சொந்த ஊர் செல்வதையும் அனுமதிக்கலாம் என்றும் காவல் துறைக்கு கூறப்பட்டுள்ளது.

வாகன சோதனையின் போது மக்களிடம் கனிவாகவும், மனிதநேயத்துடன் நடந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு நேர வாகன சோதனையின்போது ஒளிரும் மேல் சட்டை அணிந்து காவல்துறையினர் பாதுகாப்பாக பணியாற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment